UPDATED : பிப் 04, 2015 12:00 AM
ADDED : பிப் 04, 2015 12:07 PM
ராஜபாளையம்: "மாணவர்களுக்கு கடின உழைப்பு அவசியம், இந்த உழைப்பு தான் உயர்ந்தநிலைக்கு கொண்டு செல்லும்,&'&' என பள்ளி கல்விதுறை இயக்குனர் கண்ணப்பன் கூறினார்.
ராஜபாளையம் அன்னப்பராஜா நினைவு மேல்நிலை பள்ளி, மஞ்சம்மாள் நினைவு துவக்கபள்ளி ஆண்டுவிழாவில் தலைமை வகித்து அவர் பேசுகையில், "மாணவர்களுக்கு கடின உழைப்பு அவசியம். இந்த உழைப்பு தான், ஒருவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். எல்லாவற்றிற்கும் முயற்சி இருக்க வேண்டும். இடைவிடாத முயற்சியே வெற்றிக்கு அடித்தளம்" என்றார்.
ராமசந்திர ராஜா அறக்கட்டளை மேனேஜிங் டிரஸ்டி அழக ராஜா வரவேற்றார். தலைமை ஆசிரியர்கள் ராதாகிருஷ்ணன், மகாலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தனர். நூற்றுக்கு நூறு தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கு பாடவாரியாக பரிசு அளிக்கப்பட்டது. பள்ளி கல்விக்குழு உறுப்பினர்கள் செண்பகம், கிருஷ்ணசாமி, ரஜினி பெத்துராஜாவிற்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயகுமார், ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்ட அலுவலர் விஷ்ணுதாஸ் கலந்துகொண்டனர். உதவிதலைமை ஆசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.
