தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘தினமலர்’ நடத்தும் ‘கிரிக்கெட் குவிஸ்’

‘தினமலர்’ நடத்தும் ‘கிரிக்கெட் குவிஸ்’

‘தினமலர்’ நடத்தும் ‘கிரிக்கெட் குவிஸ்’


UPDATED : பிப் 05, 2015 12:00 AM

ADDED : பிப் 05, 2015 12:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 05, 2015 12:00 AM ADDED : பிப் 05, 2015 12:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: பிராட்மேன் முதல் பிராவோ வரை...’சிங்கிள்’ஸ் முதல் சிக்ஸர் வரை... கிரிக்கெட்டுன்னா ’ஸ்கெச்’ போட்டு ’பிட்ச்’சிலே பின்னி எடுத்துருவோம்ல.... என்று ’கெத்து’ காட்டும் ’யூத்’ ஆக இருந்தாலும் சரி... ’பத்து உலகக் கோப்பையைப் பார்த்தவன்டா நான்’ என்று பந்தா காட்டும், பழங்கால கிரிக்கெட் ரசிகராக இருந்தாலும் சரி; உங்களின் கிரிக்கெட் அறிவை, கிண்டிப் பார்க்க ஒரு ’கிரவுண்ட்’ தயாராகி விட்டது.

ஆம்... உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியைக் காண, உற்சாகத்தோடு பல தேசங்கள் காத்துக் கிடக்கின்றன. எங்கே சென்றாலும், ’யாருக்குக் கோப்பை’ என்று, ’விறுவிறு’ விவாதம் சூடு பறக்கிறது. நட்பு வட்டத்தோடு சேர்ந்து, அமர்க்களமாய் ’மேட்ச்’ பார்க்க, ஓட்டல்களில் அறைகள் ’புக்கிங்’ ஆரம்பித்து விட்டது. இன்னும் 10 நாட்கள் இருக்கும் நிலையில், இப்போதே பற்றிக்கொண்டது உலகக்கோப்பை கிரிக்கெட் ஜரம்.

இப்படி கிறுகிறுத்துக் கிடக்கும் கிரிக்கெட் ரசிகர்களின் மீது, பரிசு மழை பொழியப்போகிறது, ’தினமலர்’ நாளிதழ் நடத்தும் கிரிக்கெட் குவிஸ். கோவை நவஇந்தியா பகுதியிலுள்ள, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில், வரும் ஞாயிறு காலை, 10:00 மணிக்கு நடக்கவுள்ள இந்த ’குவிஸ்’ நிகழ்ச்சியை, பிரபல ’க்விஸ்’ மாஸ்டர் எம்.ரங்கராஜன் நடத்தவுள்ளார். இதில், 12 வயதுக்கு மேற்பட்ட யாரும் பங்கேற்கலாம்; அனுமதி இலவசம்.

ஓர் அணியில் இருவர் மட்டுமே பங்கேற்க வேண்டும். கிரிக்கெட் தொடர்பான கேள்விகள் மட்டுமே, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கேட்கப்படும். தகுதிச்சுற்று அடிப்படையில், இறுதிச்சுற்றுக்கு எட்டு அணிகள் தேர்வு செய்யப்படும். குவிஸ் மாஸ்டர் மற்றும் நடுவர் குழுவினரின் தீர்ப்பே இறுதியானது.

முதல் பரிசாக 10 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக 5 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இவற்றைத் தவிர்த்து, பரிசுகள் பெறும் அணிகளிலுள்ள இருவருக்கும் முழுமையான ’கிரிக்கெட் கிட்’டும் உண்டு. இதில் பங்கேற்க விரும்புவோர், ’தினமலர்’ நாளிதழில் வெளியாகியுள்ள ’கிரிக்கெட் குவிஸ்’ விளம்பரத்திலுள்ள பதிவு படிவத்தை பூர்த்தி செய்து, உரிய முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இதே விபரங்களை, crickquiz@dinamalar.in  என்ற மின்னஞ்சலிலும் அனுப்பி வைக்கலாம். கேள்விப் பந்துகளை வீச நாங்க ரெடி...பதில்களோடு அடித்து ஆட நீங்க ரெடியா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us