தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விமான படை பணிக்கான நேர்முகத்தேர்வு

விமான படை பணிக்கான நேர்முகத்தேர்வு

விமான படை பணிக்கான நேர்முகத்தேர்வு


UPDATED : செப் 21, 2015 12:00 AM

ADDED : செப் 21, 2015 10:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 21, 2015 12:00 AM ADDED : செப் 21, 2015 10:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாம்பரம்
: தாம்பரம் விமானப் படையில், பல்வேறு காலி பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு நேற்று நடந்தது. கிழக்கு தாம்பரம், ஐ.ஏ.எப்., சாலையில், இந்திய விமானப் படையின் பயிற்சி மையம் உள்ளது. 

அங்கு, நேற்று பல்வேறு காலி பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு நடந்தது. குரூப் ஒய், குரூப் எக்ஸ் ஆகிய பிரிவுகளில் வரும் கல்வி ஆய்வாளர், ஆட்டோமொபைல் துறை, பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது. 

காலை, 9 மணியில் இருந்தே, முகாமில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். நேர்முகத்தேர்வில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் சரி பார்ப்பு, உடல் மற்றும் உளவியல் சோதனைகள் நடத்தப்பட்டன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தகுதி உள்ளவர்களுக்கான நேர்முகத்தேர்வு, வரும் 22ம் தேதி நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us