தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்கள் பங்கேற்ற இசை, நடனப்போட்டி

மாணவர்கள் பங்கேற்ற இசை, நடனப்போட்டி

மாணவர்கள் பங்கேற்ற இசை, நடனப்போட்டி


UPDATED : செப் 29, 2015 12:00 AM

ADDED : செப் 29, 2015 10:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 29, 2015 12:00 AM ADDED : செப் 29, 2015 10:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
மதுரை ஒத்தக்கடை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கான இசை, நடனப்போட்டிகள் நடந்தன.

முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி துவக்கினார். தலைமையாசிரியர் முத்துக்குமாரசேஷன் வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் சாத்தாவு முன்னிலை வகித்தார். அனைவருக்கும் இடைநிலை கல்வி உதவித் திட்ட அலுவலர் அமுதா, நேர்முக உதவியாளர் ஆதிராம் சுப்பு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முத்துக்கிருஷ்ணன் பங்கேற்றனர். 

மாவட்டத்திலிருந்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 1௦௦ மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பாட்டு, நடனப் போட்டிகளில் முதலிடம் பெற்றோர், சென்னையில் நடக்கும் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். உதவி தலைமை ஆசிரியர் சரவணமுருகன் நன்றி கூறினார். ஆசிரியர் வெங்கடேசன், இசை ஆசிரியர் பெரியசாமி இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us