தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகளில் இலக்கியத்தை கற்பிக்க வேண்டும்

பள்ளிகளில் இலக்கியத்தை கற்பிக்க வேண்டும்

பள்ளிகளில் இலக்கியத்தை கற்பிக்க வேண்டும்


UPDATED : அக் 01, 2015 12:00 AM

ADDED : அக் 01, 2015 10:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 01, 2015 12:00 AM ADDED : அக் 01, 2015 10:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை
:
பள்ளிப் பாடத்திலேயே இலக்கியத்தை கற்பிக்க வேண்டும்,என, சாகித்ய அகாடமி தமிழ் ஆலோசனைக் குழு ஒருங்கிணைப்பாளர் நாச்சிமுத்து தெரிவித்தார்.

சாகித்ய அகாடமி சார்பில் மதுரை லேடிடோக் கல்லுாரியில் தமிழில் இளம் எழுத்தாளர் படைப்புகள் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கு நேற்று துவங்கியது. தமிழ்த்துறை ஏற்பாடுகளை செய்தது. 

நாச்சிமுத்து பேசியதாவது: எழுத்திலக்கியம் படைப்பதற்குரிய அடிப்படையான உளவியல், சமூகவியல், பொருளியல் காரணங்கள், பெரும் மாற்றத்திற்கு ஆளாகியுள்ளன. மனிதனின் படைப்பூக்கம் வெளிப்படும் இலக்கிய ஆக்கம், பழையகாலம் போன்று திறமைசாலிகளை உருவாக்குவதில்லை. இலக்கிய படைப்பாக்கம் தாய்மொழிகளில் நடைபெறுவதை விட, இரண்டாம் மொழிவழி நடத்த முனையும் ஒரு முயற்சியை பார்க்கிறோம். 

மாறி வரும் சூழலில் படைப்பாக்கத் திறனை வெளிப்படுத்துவதற்கு இளைஞர்களை இலக்கியத்தின் பால் ஈர்ப்பது குறித்து சிந்திக்க வேண்டும். இலக்கிய பரிசு, இளைஞர் இலக்கிய பரிசு, குழந்தை இலக்கிய பரிசு, மொழிபெயர்ப்பு பரிசு போன்ற விருதுகளை சாகித்ய விகாடமி வழங்கி வருகிறது. ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இலக்கிய பaடைப்பாக்கத்திற்கே முனைவர் பட்டம் அளித்து ஊக்கமளிக்கின்றனர். நம் பல்கலைகளும் இம்முறையை செயல்படுத்தலாம். பள்ளிப் பாடத்திட்டத்தில் இலக்கிய வரலாற்றை கற்பிக்க வேண்டும். இலக்கியம் என்பது தனிமனித காதல், மனப்போராட்டம், ஆன்மிகத் தேடல், கடவுள் வழிபாட்டுக்கு மட்டும் களமாகாது. அரசியல், பொருளாதார, சமூக முரண்பாடுகளை களைய முனையும் போராட்ட களமாகவும் வளர்ந்து வருகிறது, என்றார்.

எழுத்தாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியை மணிமேகலை நன்றி கூறினார். கருத்தரங்க அமர்வில் எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி தலைமையில் இளம் எழுத்தாளர்கள் அபிலாஷ், வீரபாண்டியன், லட்சுமி சரவணகுமார் பேசினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us