தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்தி தேர்வில் சாதனை மாணவர்

இந்தி தேர்வில் சாதனை மாணவர்

இந்தி தேர்வில் சாதனை மாணவர்


UPDATED : அக் 08, 2015 12:00 AM

ADDED : அக் 08, 2015 11:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2015 12:00 AM ADDED : அக் 08, 2015 11:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை
: மதுரையை சேர்ந்த 7ம் வகுப்பு மாணவர் ஸர்வேஷ்
, இந்தி தேர்வில் எட்டு நிலை தேர்வுகளையும் முடித்து சாதனை படைத்துள்ளார்.

மதுரை திருப்பாலையை சேர்ந்தவர் லட்சுமண குமார். இவரது மகன் ஸர்வேஷ், லட்சுமி பள்ளியில் படிக்கிறார். இவர் 3ம் வகுப்பு படிக்கும்போதே இந்தியை கற்க துவங்கினார். 2011ல் பிராதமிக், 2012 ஏப்., 12 மத்யமா, அக்டோர் 26ல் ராஷ்ட்ரபாஷா, பிரவீன் உத்தரார்த் என 8 தேர்வையும் எழுதியுள்ளார். இந்தி பண்டிட் தேர்வு எழுதுவதற்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். இத்தேர்வுக்காக காத்திருக்கிறார்.

அவர் கூறுகையில், பள்ளியில் மூன்றாம் பாடமாக இந்தியை படிக்கிறேன். ஆசிரியர்கள், பெற்றோர் அளித்த ஊக்கத்தால் இந்தி மொழியை முறைப்படி கற்க துவங்கினேன். பேராசிரியர்கள் ரவிச்சந்திரன், செல்லக்கிளியிடம் பயின்றேன், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us