UPDATED : அக் 17, 2015 12:00 AM
ADDED : அக் 17, 2015 10:55 AM
சிவகங்கை சி.இ.ஓ.,அலுவலகத்தில் அனைத்து பாடவாரியான பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு ஆன்லைன் கலந்தாய்வு நேற்று நடந்தது. சி.இ.ஓ.,செந்திவேல் முருகன் துவங்கி வைத்தார். பதவி உயர்வுக்கு தகுதி பெற்ற 34 ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதில், வேதியியல் பாடத்திற்கு மட்டுமே இம்மாவட்டத்தில் 5 முது நிலை ஆசிரியர் பணியிடம் காலியாக இருந்தது. தகுதி அடிப்படையில் ஓரிருவர் மட்டுமே தேர்வு செய்தனர். இதிலும், காலியிடம் உள்ளது.
இந்நிலையில்
தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள
காலியிடங்களுக்கு செல்வதற்கு விருப்பமின்றி, பதவி உயர்வை தவிர்த்தனர். 9 பேர் தவிர,
25 பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை பதவி உயர்வை
விரும்பவில்லை என, கல்வித்துறையினர் தெரிவித்தனர்.
ஆசிரியர்கள் கூறுகையில், ஒரு சில பாடத்தில் பதவி உயர்வு கிடைக்க கால தாமதம் ஏற்படுவதை தவிர்க்க, 10 ஆண்டுக்கு பின், பட்டதாரி ஆசிரியர்களுக்கு செலக்ஷன் கிரேடு கொடுத்து சம்பள உயர்வு அளிக்கப்படுகிறது. செலக்ஷன் கிரேடுக்கு பின், பதவி உயர்வு வழங்கினால் 6 சதவீத டி.ஏ., கிடைக் கும் என்பதால் அதற்காக பதவி உயர்வை தவிர்க்கின்றனர். மேலும், வெளி மாவட்டத்திற்கு செல்ல விருப்பமின்றியும் தவிர்க்கலாம், என்றனர்.
