UPDATED : அக் 27, 2015 12:00 AM
ADDED : அக் 27, 2015 01:36 PM
அ நிறம் | அளவு
சென்னை
: மத்திய
உயர்கல்வி நிறுவனமான, இந்திய தகவல் தொழில்நுட்ப மையம் ஐ.ஐ.ஐ.டி., காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலுார் கேளம்பாக்கம் சாலையில் உள்ளது.
இங்கு, இளங்கலை மற்றும் முதுகலையில், பி.இ., - பி.டெக்., படிப்புகள், பல்வேறு பாடப்பிரிவுகளில்
நடத்தப்படுகின்றன. இந்நிலையில், ஜனவரியில் துவங்கும், பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு மாணவர் சேர்க்கை
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கம்ப்யூட்டர்
இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கணிதம், எலக்ட்ரானிக்ஸ் டிசைன் மற்றும் ஐ.டி., பாடப்பிரிவுகளில், மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ளவர்கள்,
http://www.iiitdm.ac.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
