தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ கவுன்சில் விரைவில் ஆய்வு

மருத்துவ கவுன்சில் விரைவில் ஆய்வு

மருத்துவ கவுன்சில் விரைவில் ஆய்வு


UPDATED : நவ 03, 2015 12:00 AM

ADDED : நவ 03, 2015 10:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2015 12:00 AM ADDED : நவ 03, 2015 10:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடந்த 2009ம் ஆண்டு சென்னை மற்றும் கோவையில் புதிதாக இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரி கட்டப்படும் என, மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, கோவை வரதராஜபுரத்தில், 520 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவ கல்லுாரிக்கான கட்டுமான பணிகள் துவங்கப்பட்டன.

இம்மருத்துவக் கல்லுாரிகளை மத்திய அரசு நடத்துவதா அல்லது மாநில அரசுகள் நடத்துவதா என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. தற்போது கோவை இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரிக்கு தமிழக அரசின் மருத்துவக் கல்வி இயக்கனரகம் சார்பில் புதிய டீன் நியமித்தது. இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரிகளை தமிழக அரசே ஏற்று நடத்த உள்ளது இதன் மூலம் தெளிவானது. 

இதையடுத்து, கோவை இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரிக்கான அனுமதி கோரி இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட இந்திய மருத்துவக் கவுன்சில் உறுப்பினர்கள், இம்மாதம் மருத்துவ இடங்களுக்கு அனுமதி வழங்க கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us