UPDATED : நவ 21, 2015 12:00 AM
ADDED : நவ 21, 2015 10:45 AM
அமைச்சர் ஸ்மிருதி இரானி, தன் கல்வித்தகுதி குறித்து தேர்தல் ஆணையத்திற்கு தவறான தகவல் அளித்துள்ளதால், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி, டில்லி பெருநகர நீதிமன்றத்தில், பத்திரிகையாளர் அஹ்மர் கான் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு,
டில்லி பெருநகர நீதிமன்ற நீதிபதி ஆகாஷ் ஜெயின்
முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்மிருதி இரானி யின் கல்வித்தகுதி சான்றுகளை பெற முடியவில்லை&'
என, அஹ்மர் கான்
தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து,
ஸ்மிருதி இரானி, 2014ம் ஆண்டு எம்.பி., தேர்தலின் போது தேர்தல் ஆணையத்திடம்
சமர்ப்பித்த ஆவணங்களையும், டில்லி திறந்தநிலை பல்கலை அவருக்கு
வழங்கிய பட்டச் சான்றிதழ் விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டார்.
ஸ்மிருதி
இரானியின், 10 மற்றும் பிளஸ் 2 கல்விச் சான்றிதழ்களை வழங்க உத்தரவிட
வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்த
நீதிபதி, வழக்கை, 2016 மார்ச் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
பின்னணி விவரம்
ஸ்மிருதி இரானி, டில்லி திறந்தநிலை பல்கலையில், 1996ல், பி.ஏ., பட்டம் பெற்றதாக, 2004ல் அளித்த ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், 2014 லோக்சபா தேர்தலில், அமேதி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அவர், தேர்தல் ஆணையத்திடம் வழங்கிய பிரமாண பத்திரத்தில், தன்னை, பி.காம்., பட்டதாரி&' என குறிப்பிட்டுள்ளார். தேர்தல் ஆணையத்திற்கு, தெரிந்தே தவறான தகவல் அளித்த ஸ்மிருதி இரானி மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
