UPDATED : நவ 24, 2015 12:00 AM
ADDED : நவ 24, 2015 11:59 AM
அ நிறம் | அளவு
சென்னை
: தமிழ்நாடு
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத் தலைவர் கே.பி.ஓ.சுரேஷ் கூறியதாவது: பத்தாம்
வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, அரையாண்டுத் தேர்வு தான் பொதுத் தேர்வுக்கு முன்னோட்டம் போன்றது.
இந்த தேர்வில், அவர்கள் தயாராவதன் மூலமே, பொதுத் தேர்வை சரியாக எழுத முடியும். எனவே, அரையாண்டுத் தேர்வை ரத்து செய்ய முடியாது. அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் வர உள்ளதால், பொதுத் தேர்வையும் முன்கூட்டியே நடத்த வேண்டியுள்ளது. எனவே, நீண்ட நாட்கள் அரையாண்டுத் தேர்வை தள்ளிப் போடவும் முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
