தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கேட் தேர்வு; பி.இ.,க்கள் ஆர்வம்!

கேட் தேர்வு; பி.இ.,க்கள் ஆர்வம்!

கேட் தேர்வு; பி.இ.,க்கள் ஆர்வம்!


UPDATED : நவ 30, 2015 12:00 AM

ADDED : நவ 30, 2015 03:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 30, 2015 12:00 AM ADDED : நவ 30, 2015 03:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

300 மையங்களில்:

வரும் கல்வி ஆண்டில், எம்.பி.ஏ., படிப்பதற்கான, கேட் எனப்படும், பொது மாணவர் சேர்க்கை தேர்வு, நாடு முழுவதும், 300 மையங்களில் நேற்று நடந்தது. 2.19 லட்சம் பேர் தேர்வுக்கு பதிவு செய்திருந்தனர். மூன்று தாள்கள், தலா ஒரு மணி நேர, ஆன்லைன் தேர்வு நடந்தது. தமிழகத்தில், சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நாமக்கல், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில், 30 தேர்வு மையங்களில், இந்த தேர்வு நடந்தது. சென்னையில், 10 ஆயிரம் பேர் உட்பட, தமிழகத்தில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

80 சதவீதம்இவர்களில், 80 சதவீதம் பேர், பி.இ., இறுதி ஆண்டில் படிக்கும் அல்லது கடந்த ஆண்டு, பி.இ., முடித்தவர்கள். அதிகமானோர் எழுத காரணம் இந்த தேர்வு, 2007ல் துவங்கிய போது, 2.50 லட்சம் பேர் தேர்வு எழுதினர். பின், படிப்படியாகக் குறைந்தது. 2014ல், 1.96லட்சம் பேர் பங்கேற்றனர்; இந்த ஆண்டு, 2.19 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

இதுகுறித்து, ஐ.எம்.எஸ்., எனப்படும், முன்னணி தனியார் பயிற்சி மையம் ஒன்றின், சென்னை மைய இயக்குனர் டோனி சேவியர் கூறுகையில், ஐ.ஐ.எம்., எண்ணிக்கை, 19 ஆக அதிகரித்துள்ளதால், இடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது; தேர்வும் கொஞ்சம் எளிதாகியுள்ளது. இன்ஜி., மாணவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் வருவதால், எம்.பி.ஏ., படிக்க விரும்புகின்றனர். இந்த விழிப்புணர்வு சமீப காலமாக அதிகரித்துள்ளது, என்றார்.

வணிகவியல் படிப்புக்கு இன்ஜினியர்கள் ஆசை:

எம்.பி.ஏ., எனப்படும் மேலாண் நிர்வாக படிப்பு, வெறும் வணிகவியல் தொடர்பான படிப்பாக இருந்த நிலை மாறி, தற்போது அனைத்து பட்டதாரிகளுக்கும் தேவையான படிப்பாக மாறி விட்டது. பி.இ., பி.டெக்., மாணவர்கள், எம்.பி.ஏ., படிக்க அதிக ஆர்வம் கொண்டுள்ளனர்.

அதிலும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும், உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்களில் படிக்க, இன்ஜி., பட்டதாரிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். எம்.பி.ஏ., படித்தால் தனியார் நிறுவனங்களில், ஆரம்பத்திலேயே அதிக சம்பளத்துடன் வேலை கிடைப்பதோடு, பதவி உயர்வுக்கும் வாய்ப்புகள் உள்ளதே காரணம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us