UPDATED : டிச 09, 2015 12:00 AM
ADDED : டிச 09, 2015 10:20 AM
கூடலுார்
: கூடலுார்,
அரசு பள்ளி மாணவர்கள், சிலர் காய்ச்சல் காரணமாக, மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டனர்.
கூடலுார் புளியாம்பாறை அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும், நான்கு மாணவர்களுக்கு ஏற்பட்ட காய்ச்சல், இருமல் காரணமாக, கடந்த சில நாட்களாக, கூடலுார் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்த தகவல் அறிந்த, கிராம நிர்வாக அலுவலர் கமல், விசாரணை செய்து, சுகாதார துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அப்பள்ளியில், நெலாகோட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கதிரவன் தலைமையில், டாக்டர்கள் சாய்குமார், மதுபிரியா கொண்ட மருத்துவ குழுவினர், 140 மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். பின்பு சுகாதார விளக்கம் அளிக்கப்பட்டது. முகாமில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அமிர்தலிங்கம், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
