UPDATED : டிச 12, 2015 12:00 AM
ADDED : டிச 12, 2015 10:44 AM
அ நிறம் | அளவு
உத்தர பிரதேச மாநிலம், முசாபர்நகர் மாவட்ட கிராமம் ஒன்றில், 12 வயது மாணவியை, பள்ளி நேரம் முடிந்த பின், கத்திமுனையில் மிரட்டி, ஆசிரியர் ஒருவர் பலாத்காரம் செய்துள்ளார். நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால், கொன்று விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
ஆசிரியரின் மிரட்டலில் பயந்து போன அந்த மாணவி, பள்ளியை விட்டு வெளியே வந்ததும் அழுதுள்ளார். அதைப் பார்த்த கிராமத்தினர் சிலர், நடந்த சம்பவம் பற்றி கேட்டறிந்துள்ளனர்; உடன் ஆசிரியரைசரமாரியாகத் தாக்கினர். தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஆசிரியரை கைது செய்தனர். மாணவியை மருத்துவபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
