தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசுப் பள்ளிகளில் முகநூல் அடிமைகள்!

அரசுப் பள்ளிகளில் முகநூல் அடிமைகள்!

அரசுப் பள்ளிகளில் முகநூல் அடிமைகள்!


UPDATED : டிச 28, 2015 12:00 AM

ADDED : டிச 28, 2015 10:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 28, 2015 12:00 AM ADDED : டிச 28, 2015 10:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாநில அரசின் மனநல திட்டத்தின் மூலம் கடந்தாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் ஒன்பது, பத்து மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு வாழ்க்கைத் திறன் பயிற்சி மற்றும் கவுன்சிலிங் அளிக்கப்படுகிறது. மாணவிகளுக்கு குடும்ப பிரச்னை அதிகம் இருப்பதாக கவுன்சிலிங்கில் தெரிவிக்கும் அதேநேரத்தில் மாணவர்கள் முகநுால் அடிமைகளாக மாறிவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மனநல திட்ட டாக்டர் சிவசங்கரி கூறியது: 

ஒன்பதாம் வகுப்பில் இருந்தே இப்பழக்கத்திற்கு அடிமையாக உள்ளனர். இம்மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வெழுத முடியாமல் தவிக்கின்றனர். பள்ளிகளில் அலைபேசி கொண்டுவர தடை விதிக்கப்பட்டிருந்தாலும், பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்றவுடன் விளையாடுவதில்லை.

அலைபேசியில் முகநுால் மூலம் மணிக்கணக்கில் சாட்டிங் செய்கின்றனர். இதுவரை பத்து மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளித்துள்ளோம். சில மாணவர்களின் பெற்றோர்களிடம் பிரச்னையை முழுமையாக தெரிவித்து மதுரை அரசு மருத்துவமனை மனநலப் பிரிவில் சிகிச்சை அளித்துள்ளோம். அதிக ஆர்வம், கோளாறால் முகநுாலை பார்க்கும் மனநிலையை மருந்துகளின் மூலம் மாற்றி வருகிறோம். பெற்றோர்கள் இவ்விஷயத்தில் பிள்ளைகளிடம் கூடுதல் செலுத்தினால் தான் அடிமை நிலையில் இருந்து மீட்க முடியும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us