தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குழந்தைகளுக்கு கல்வி விழிப்புணர்வு பிரசாரம்

குழந்தைகளுக்கு கல்வி விழிப்புணர்வு பிரசாரம்

குழந்தைகளுக்கு கல்வி விழிப்புணர்வு பிரசாரம்


UPDATED : மார் 24, 2016 12:00 AM

ADDED : மார் 24, 2016 10:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 24, 2016 12:00 AM ADDED : மார் 24, 2016 10:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மொடக்குறிச்சி
: மாற்றுத்திறனாளி குழந்தைகளை உள் இணைத்து கல்வி தருவோம் என்ற விழிப்புணர்வு பிரசாரம் நாதகவுண்டன்பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது. 

பெங்களூர் சி.பி.எம்., சாரோ நிறுவனம், நாகர்கோவில் அக்கம்பக்கத்து பிணைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்கள், கோவை விடியல் அறக்கட்டளை இணைந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு மூலம் நாடகம், கலை நிகழ்ச்சி ஆகியவை மூலம் விழிப்புணர்வு நடத்தப்பட்டன. அதில் மாற்றுத்திறன் உள்ள குழந்தைகள் அனைவரும், அவரவர் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்க வேண்டும். 

உள் இணைக்கும் கல்வி திட்டத்தை பெற்றோர்கள் புரிந்துகொண்டு தங்களுடைய மாற்றுத்திறன் குழந்தைகளை தங்கள் கிராமத்தில் அல்லது கிராமத்தில் அருகில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும். சிறப்பு பள்ளிகளில் உள்ளது போல் அரசு பள்ளிகளிலும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு தேவைப்படும் அனைத்து கல்வி உபகரணங்களும், சாதனங்களும் கொடுக்க அரசு உதவி செய்ய வேண்டும் என்று விழிப்புணர்வு மூலம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். 

பள்ளி தலைமை ஆசிரியை புவனா தலைமை வகித்தார். கஸ்பாபேட்டை பள்ளி தலைமை ஆசிரியை செல்லம்மாள், மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளி சிறப்பு ஆசிரியர், பயிற்றுனர் கிருஷ்ணவேணி, தாமஸ் ஆன்டனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us