தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு

அரசு பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு

அரசு பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு


UPDATED : மார் 24, 2016 12:00 AM

ADDED : மார் 24, 2016 10:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 24, 2016 12:00 AM ADDED : மார் 24, 2016 10:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்
: விழுப்புரம் அரசு பொறியியல் கல்லுாரியில்
, தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் நடந்தது.

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லுாரிகளின் பல்வேறு துறைகள் இணைந்து மாணவர்களின் ஆற்றல், திறனை வெளிபடுத்தவும், புதிய கண்டுபிடிப்புகளை படைப்பதோடு, தொழில்நுட்பம் சார்ந்த போட்டிகள், பயிலரங்கம் உள்ளிட்ட அக்னிமித்ரா 2016 கருத்தரங்கு நடந்தது. 

விழுப்புரம் அடுத்த காகுப்பம் அரசு பொறியியல் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, சென்னை தொழில்நுட்ப நிறுவனத்தின் புல முதல்வர் ராஜதுரை தலைமை தாங்கி, கருத்தரங்கை துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) செந்தில் வரவேற்றார். அதனை தொடர்ந்து பல்வேறு பொறியியல் கல்லுாரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் இருந்து பங்கேற்ற மாணவ, மாணவிகள் ஆய்வு கட்டுரைகளை சமர்பித்தனர்.

இதில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை உதவி பேராசிரியர்கள் பழனி, கவிதா, கீதா கிருஷ்ணன் மற்றும் மாணவர் அசோக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us