UPDATED : மார் 31, 2016 12:00 AM
ADDED : மார் 31, 2016 10:57 AM
திருக்கோவிலுார்
: திருக்கோவிலுாரில்
ஸ்ரீ சாரதா வித்யாஸ்ரம் சி.பி.எஸ்.சி., பள்ளியில்
பெற்றோர்கள், கல்வியாளர்கள் சந்திப்பு விழிப்புணர்வு
முகாம் நடந்தது.
திருக்கோவிலுார், தியாகி வடிவேல் நகரில் ஸ்ரீ சாரதா வித்யாஸ்ரம் சி.பி.எஸ்.சி., பாட திட்ட பள்ளி துவங்கப்பட்டுள்ளது. மாணவர்கள், பெற்றோர்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம், சுப்ரமணிய மஹால் திருமண மண்டபத்தில் நடந்தது. சென்னை கேந்திர வித்யாலயா பள்ளி ஆசிரியர் ராஜம்மாள் வரவேற்றார்.
பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். செயலாளர் பிரபு முன்னிலை வகித்தார். கல்வியாளர்கள் கோபாலராமகிருஷ்ணன், சசிகலா விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டு, பெற்றோர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.
சி.பி.எஸ்.சி., பாடத் திட்டம், ஆசிரியர்கள்-, பெற்றோர்களின் சந்திப்பு குறித்து பேசப்பட்டது. கல்வி ஆலோசகர் வினோத்குமார் நன்றி கூறினார்.
