தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மின்சாரமின்றி தானியங்களை பிரித்தெடுக்கும் கருவி

மின்சாரமின்றி தானியங்களை பிரித்தெடுக்கும் கருவி

மின்சாரமின்றி தானியங்களை பிரித்தெடுக்கும் கருவி


UPDATED : ஏப் 08, 2016 12:00 AM

ADDED : ஏப் 08, 2016 11:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 08, 2016 12:00 AM ADDED : ஏப் 08, 2016 11:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகாசி
: சிவகாசி எஸ்.ஐ.பி.டி.
, பாலிடெக்னிக் மாணவர்கள் மின்சாரமின்றி தானியங்களை பிரித்தெடுக்கும் கருவியை உருவாக்கி உள்ளனர்.

அரவைக்கு முன்பு அரிசி, பருப்பு, நெல், கோதுமை உள்ளிட்ட தானியங்களில் சிக்கி கொண்டிருக்கும் புழுதி, குப்பை, கற்களை மின்சார உதவியின்றி பிரித்தெடுக்கும் புதிய கருவியை சிவகாசி எஸ்.ஐ.பி.டி., பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களான ராஜ்கரண், கருப்பசாமி, பால முருகன், முனீஸ்வரன் உருவாக்கி உள்ளனர்.

இக்கருவி கூம்பு வடிவில் ஏணி விளையாட்டு பொருள் போல் உள்ளது. விவசாயப் பொருட்களை கருவியின் மேலே புனலில் கொட்ட, கீழேயுள்ள வளைவு சுருள் பாதை மூலம் கீழே விழ

ஆரம்பிக்கும். வளைவில் வரும்போது ஏற்படும் மைய விலக்கு விசையினால் எடை மிகுந்த பொருட்கள் வெளிவட்டப் பாதையிலும் எடை குறைந்த பொருட்கள் உள்வட்டப் பாதையிலும் வந்து கீழே தனித் தனி பெட்டிகளில் விழும். மின்சாரம் இல்லாமல் எளிதாக களத்து மேட்டிலேயே அனைத்து விவசாய பொருட்களையும் தரம் பிரித்து ஏற்றுமதித் தரத்துடன் அனுப்ப முடியும்.

மாணவர்கள் கூறுகையில்,

இந்த கருவியானது centrifugal force ( மைய விலக்கு) விசை, புவி ஈர்ப்பு விசையினாலும் இயங்க கூடியது. இதை இயக்க மின்சாரம் தேவை யில்லை. இதன் மூலம் நவதானியம் மற்றும் எடை குறைந்த பொருட்களை தரம் பிரிக்க முடியும். 

எளிதில் குப்பை, கற்களையும் அகற்றவும் முடியும். இக் கருவி கோவையில் நடந்த மாநில அளவிலான பிராஜக்ட் ஒர்க் ஸ்பாப் போட்டியில் பங்கேற்று முதல் பரிசு, பதக்கம் மற்றும் ரொக்கப்பரிசு பெற்றது, என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us