தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொழில்நுட்ப கல்லூரி பட்டமளிப்பு விழா

தொழில்நுட்ப கல்லூரி பட்டமளிப்பு விழா

தொழில்நுட்ப கல்லூரி பட்டமளிப்பு விழா


UPDATED : ஏப் 16, 2016 12:00 AM

ADDED : ஏப் 16, 2016 10:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 16, 2016 12:00 AM ADDED : ஏப் 16, 2016 10:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
பச்சாபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரியின், பத்தாவது பட்டமளிப்பு விழா நேற்று கல்லுாரி அரங்கில் நடந்தது.

இதில், எஸ்.என்.ஆர்., அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் தலைமைவகித்தார். மேலும், சென்னை ஏக்சில்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுரேந்திரன் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில், &'&'பிற நாடுகளை ஒப்பிடுகையில், இந்திய பொறியாளர்களுக்கு அறிவு கூர்மை அதிகமாகவே உள்ளது.

கடந்த இருபது ஆண்டுகளாக, உலக சந்தையில், இந்திய பொறியாளர்களின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது. பட்டம் பெறுவதுடன் கல்வி முடிவது கிடையாது என்பதை உணர்ந்து, காலத்திற்கேற்ப மேம்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும், என்றார்.

இவ்விழாவில், 463 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர். அண்ணா பல்கலை அளவில் தரவரிசையில் இடம்பெற்ற ஒன்பது மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர். கல்லுாரி முதல்வர் பால்ராஜ், இயக்குனர் எபினேசர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us