UPDATED : மே 04, 2016 12:00 AM
ADDED : மே 04, 2016 10:43 AM
அ நிறம் | அளவு
கரூர்
: கரூர் அரசு கலைக்கல்லூரியில் நேற்று முதல், வரும் கல்வியாண்டுக்கான, விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டது.
: கரூர் அரசு கலைக்கல்லூரியில் நேற்று முதல், வரும் கல்வியாண்டுக்கான, விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டது.
கரூர் அருகே, தான்தோன்றிமலையில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில், பி.ஏ., - பி.பி.ஏ., - பி.எஸ்சி., - பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் - பி.காம்., கம்ப்யூட்டர் அப்பிளிகேஷன் ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளது. வரும் (2016-17) கல்வியாண்டுக்கான, இளங்கலை படிப்புக்கான விண்ணப்ப படிவங்கள் மாணவ, மாணவியர்களுக்கு கல்லூரியில் நேற்று வழங்கப்பட்டது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை, வரும், 26ம் தேதிக்குள் வழங்க வேண்டும். விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கலந்தாய்வு வரும், ஜூன், 2ம் தேதி நடக்கிறது.
தொடர்ந்து, பி.ஏ., தமிழ், ஆங்கிலம் பாடப்பிரிவுகளுக்கு ஜூன், 6ம் தேதியும், பி.எஸ்சி., அனைத்து பாடப்பிரிவுகளுக்கு, ஜூன், 8ம் தேதியும், பி.காம், - பி.காம்., - சி.ஏ., - பி.பி.ஏ., - பி.பி.எம்., - பி.ஏ., வரலாறு மற்றும் பொருளியல் பாடப்பிரிவுகளுக்கு, ஜூன், 10ம் தேதியும் கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது.
