UPDATED : மே 24, 2016 12:00 AM
ADDED : மே 24, 2016 10:06 AM
புதுச்சேரி
:
ஒருங்கிணைந்த சான்றிதழ் புதுப்பிக்க தாலுகா அலுவலகங்களுக்கு மாணவர்கள் படையெடுத்து
வருகின்றனர்.
குடிநீர், இருக்கை உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாததால், மாணவர்களும் பெற்றோரும் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர்.
புதுச்சேரியில்
பிளஸ் 2 தேர்வு 19ம் தேதி வெளியானது. தேர்வு முடிந்துள்ளால்,
மாணவர்கள் பொறியியல், மருத்துவம், கலை அறிவியல் உள்ளிட்ட பாட பிரிவுகளுக்கு
விண்ணப்பிக்க தயாராகி வருகின்றனர். மேல்படிப்பு விண்ணப்பிக்க மாணவரின்
குடியிருப்பு, ஜாதி மற்றும்
பெற்றோரின் வருமான சான்றிழ் அவசியம்.
பள்ளியில்
10ம் வகுப்பு படிக்கும்போது வழங்கப்பட்ட
ஒருங்கிணைந்த சான்றிதழ் வைத்திருந்தாலும், மேல்படிப்பிற்கு
விண்ணப்பிக்க அவை புதுப்பித்து இருக்க வேண்டும் என சென்டாக் தெரிவித்துள்ளது.
இதனால், பிளஸ் 2 முடித்த மாணவர்கள் ஒருங்கிணைந்த சான்றிதழ்
புதுப்பிக்க தாசில்தார் அலுவலகங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
புதுச்சேரி,
உழவர்கரை, வில்லியனுார், பாகூர் தாசில்தார் அலுவலகங்களில் தினந்தோறும்
மாணவர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. சென்டாக் மாணவர் சேர்க்கையில் பல்வேறு
முறைகேடுகள் அரங்கேறியதால், வருவாய்த்துறையினர்
சான்றிதழ் வழங்க தீவிர விசாரணை நடத்துவதால், உரிய ஆவணங்களை கொண்டு வராத மாணவர்கள் அலைந்து
திரிகின்றனர்.
தெளிவுபடுத்துமா
?
பிளஸ்
2 மாணவர்கள் ஒருங்கிணைந்த சான்றிதழ்
புதுப்பிக்க வரும்போது, அண்மையில் பெற்ற,
வசிக்கும் இடத்திற்கான ஆதாரம், பெற்றோரின் பணியை உறுதி செய்யும் சான்றிதழ்,
பள்ளியில் பெற்ற ஸ்டடி சான்றிதழ் உள்ளிட்ட
ஆவணங்களை தவறாமல் கொண்டு வர வேண்டும். மாணவர்கள் எந்த ஆவணங்கள் கொண்டு வர வேண்டும்
என சில தாலுகா அலுவலக தகவல் பலகையில் ஒட்டப்பட்டு இருந்தாலும், சில தாலுகா அலுவலகத்தில் அந்த விபரம் இல்லை.
ஆட்கள்
பற்றாக்குறை
ஒவ்வொரு
தாலுகா அலுவலகத்திலும் தினசரி 100 முதல் 150 மாணவர்களுக்கு மட்டுமே சான்றிதழ் கொடுக்கும் வசதி
உள்ளது. ஆனால், தினந்தோறும் 200 முதல் 300க்கும்
அதிகமான மாணவர்கள் குவிந்து விடுகின்றனர். தாலுகா அலுவலகத்தில் ஆட்கள்
பற்றாக்குறையால், மாணவர்களை
கட்டுப்படுத்த முடியாமல் தாலுகா அலுவலக ஊழியர்கள் திணறி வருகின்றனர்.
அடிப்படை
வசதி இல்லை
தாலுகா அலுவலகத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் குவிந்து விடுவதால், மாணவர்களுக்கு போதிய அளவில் குடிநீர், இருக்கை வசதிகள் இல்லை. மாணவர்கள் நீண்ட நேரம் வரிசையில் கால்கடுக்க நிற்கும் நிலையே உள்ளது. எனவே, தாலுகா அலுவலகங்களில் இருக்கை, குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
