UPDATED : மே 29, 2016 12:00 AM
ADDED : மே 29, 2016 07:13 AM
சென்னை:
இளம் அறிவியலாளர்களுக்கான ஆராய்ச்சி குறித்த பயிற்சி, சென்னையில் உள்ள அறிவியல் மையத்தில் அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் அய்யம் பெருமாள் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இளம் வயதிலுள்ள அறிவியல் சிந்தனையாளர்களை, ஆராய்ச்சி படிப்புகளில் ஊக்குவிக்க, சென்னை அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தென்னிந்திய ஆராய்ச்சி மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புக்கான இந்த பயிற்சியில், தனியார் அறக்கட்டளையுடன் இணைந்து, பல நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.
இவற்றில், சமீபத்தில் நடந்த, ஐந்து அறிவியல் கண்காட்சிகளில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற தென் மாநிலங்களை சேர்ந்த, 75 இளம் அறிவியலாளர்கள் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
