UPDATED : ஜூன் 04, 2016 12:00 AM
ADDED : ஜூன் 04, 2016 10:32 AM
சென்னை
: சென்னை
மாநகராட்சி நடத்தும் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர, மாணவர்கள் வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
என மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து
மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை
மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தில், ஆறு வகையான
பாடப் பிரிவுகளில், பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இங்கு,
கற்போருக்கு என்.சி.வி.டி., சான்றிதழ் வழங்கப்படுகிறது.
மாநகராட்சி
பள்ளிகளில் பயின்ற மாணவர்கள், மாநகராட்சி ஊழியர்களின் குழந்தைகளுக்கு,
இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர முன்னுரிமை
வழங்கப்படும்.
மீதமுள்ள
இடங்கள், மற்றவர்களுக்கு ஒதுக்கீடு
செய்யப்படும். இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில், படிக்கும் மாணவர்களுக்கு இலவச சீருடை, இலவச பஸ் பாஸ், லேப்டாப், பயிற்சி காலத்தில், மாதம் 500 ரூபாய் ஊக்கத்தொகை ஆகியவை வழங்கப்படும். பயிற்சி முடித்ததும்,
முன்னணி நிறுவனங்களில் மாநகராட்சியே வேலை
பெற்றுத்தரும்.
தொழிற்பயிற்சி
நிலையத்தில் சேர விரும்பும் மாணவர்கள், மாநகராட்சி
தொழிற்பயிற்சி நிலையம், நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி நகர்,
ஸ்கொயர் பிளாக், முத்தையா முதலி தெரு அருகில், லாயிட்ஸ் காலனி, சென்னை-14 என்ற முகவரியில், விண்ணப்ப படிவங்களை இலவசமாக பெற்றுக்
கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜூன் 20ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். வரும் 23ம் தேதி காலை 10:00 மணிக்கு, விண்ணப்பித்த அனைவருக்கும் கலந்தாய்வு நடக்கும். கலந்தாய்வுக்கு வருவோர், அசல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும். தொழிற்பயிற்சி வகுப்பில் சேர, வயது வரம்பு, 15 முதல் 40 ஆகும். இவ்வாறு, அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
