UPDATED : ஜூன் 16, 2016 12:00 AM
ADDED : ஜூன் 16, 2016 10:46 AM
திருப்பூர்
:
பொதுத்தேர்வில் சாதனை புரியும் மாணவர்களை ஊக்குவிக்கவும், உயர் கல்வி குறித்து ஆலோசனை வழங்கவும், மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.
திருப்பூர்
மாநகராட்சி கட்டுப்பாட்டில் நஞ்சப்பா, ஜெய்வாபாய்,
சின்னச்சாமி அம்மாள், பழனியம்மாள், குமார்நகர், கருவம்பாளையம் உள்ளிட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இங்கு கல்வி
பயிலும் மாணவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை பெற்றுத்தர வேண்டியது, மாநகராட்சியின் பொறுப்பு.
ஆனால், மாநகராட்சி தரப்பில் இருந்து, பள்ளிக்கோ, மாணவ, மாணவியருக்கோ, பெரிய அளவில் உதவி செய் யப்படுவதில்லை.
தலைமை ஆசிரியர் வாயிலாகவோ, அல்லது தாங்களே அலைந்து திரிந்து,
பிள்ளைகளுக்கு தேவையான உதவிகளை பெற்றோர்
பெற்றுத்தர வேண்டியுள்ளது.
அதேபோல்,
பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும்
மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியரை கவுரவிக்க, மாநகராட்சி முன்வருவதில்லை என, பெற்றோர் மத்தியில் அதிருப்தி உள்ளது. சென்னை உள்ளிட்ட சில
மாநகராட்சிகளில், பொதுத்தேர்வில் சாதிக்கும் மாணவ,
மாணவியர் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
உயர்கல்வி
குறித்து, மாணவ, மாணவியருக்கு கலந்தாய்வும் நடத்தப்படுகிறது. முதல் மதிப்பெண் பெற்ற
மாணவர்களுக்கு, பரிசு வழங்கப்படுகிறது.
இதை பின்பற்றி, பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை கவுரவிக்கவும், உயர் கல்வி குறித்த ஆலோசனை நிகழ்ச்சி நடத்தவும், திருப்பூர் மாநகராட்சி முன்வர வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
