sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஜி.ஆர்.இ. தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி

/

ஜி.ஆர்.இ. தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி

ஜி.ஆர்.இ. தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி

ஜி.ஆர்.இ. தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி


UPDATED : ஜூன் 27, 2009 12:00 AM

ADDED : ஜூன் 27, 2009 05:03 PM

Google News

UPDATED : ஜூன் 27, 2009 12:00 AM ADDED : ஜூன் 27, 2009 05:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து ஜி.ஆர்.இ. தேர்வை 50 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். இதில் பலர் வெற்றி பெற முடிவதில்லை. போதிய திறன் இல்லாதது இதற்குக் காரணமல்ல. தேர்வு முறைகள் நமக்கு இன்னமும் பரிச்சயமாகவில்லை என்பது தான் உண்மையான காரணம். எனவே ஜி.ஆர்.இ. தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி இப்போது ஆன்லைனில் தரப்படுகிறது. இதனால் நமது மாணவர்கள் இனிமேல் சிறப்பாக இத்தேர்வை எழுத முடியும்.
அமெரிக்காவில் கல்வி பயில ஜி.ஆர்.இ. தேர்வானது அடிப்படைத் தேவையாக இருக்கிறது. இத்தேர்வை பல நாடுகளும் அங்கீகரித்துள்ளன. இத்தேர்வை எழுதவோருக்கான பயிற்சியை அளிப்பதற்கான பிரத்யேகமான இணைய தளமான தீதீதீ.ஞ்ணூஞுஞுஞீஞ்ஞு.ஞிணிட்  துவங்கப்பட்டுள்ளது. 2005ம் ஆண்டு முதல் இத்தளம் வடிவமைக்கப்பட்டு வந்ததாகவும் இதுவரை 15 ஆயிரம் பேர் இதில் பயிற்சி பெற்றிருப்பதாகவும் தள நிறுவனர்கள் தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் இத்தளத்தை பயன்படுத்துவதை மில்லிசெகண்ட் டெக்னாலஜி என்னும் தொழில்நுட்பம் கணக்கிடுகிறது. இதனால் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதம், பதில்களை பகுத்தாய்வு செய்வது ஆகியவற்றை அறிந்து அவர்களது மதிப்பெண்களை அதிகரிக்கும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இத்தளத்தின் ஆலோசகர் மாணவர்களின் தனிப்பட்ட பலம் பலவீனங்களை அறிந்து தக்க ஆலோசனைகளைத் தரவிருக்கிறார். இத்தளம் தற்போது ரூ.6 ஆயிரம் கட்டணமாகப் பெறுகிறது. கிட்டத்தட்ட 120 மணிநேர பயிற்சியை இது தருகிறது.






      Dinamalar
      Follow us