தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவத்தில் நானோ தொழில் நுட்பம்

மருத்துவத்தில் நானோ தொழில் நுட்பம்

மருத்துவத்தில் நானோ தொழில் நுட்பம்


UPDATED : ஆக 03, 2009 12:00 AM

ADDED : ஆக 03, 2009 12:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 03, 2009 12:00 AM ADDED : ஆக 03, 2009 12:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு


மெட் இந்தியா மற்றும் இந்திய மருத்துவக் கழகம் சார்பில், கோவையில் நேற்று ஜீரண நலத்துறை மாநாடு நடந்தது. டாக்டர் சந்திரசேகர் தலைமை வகித்தார். மாநாட்டை ராணுவத்துறை விஞ்ஞானி சிவதாணு பிள்ளை துவக்கி வைத்து பேசியதாவது:


ராணுவத்தில் நடக்கும் பல்வேறு ஆராய்ச்சிகள் பொதுமக்களுக்கும், மருத்துவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளன. இந்திய மருத்துவத்துறையில் தரமான, அதே சமயம் மலிவான விலையில் மருந்துகள் கிடைப்பதால், உலக நாடுகளின் கவனத்தை கவர்ந்துள்ளது.


இரண்டாம் உலகப் போருக்குப் பின் தொழில்துறை மற்றும் மருத்துவத்துறையில் பல்வேறு கண்டு பிடிப்புகள் நிகழ்ந்துள்ளன. நானோ தொழில்நுட்பம் மூலம் குறைந்த செலவில், தீர்க்க முடியாத நோய்களுக்கும் மிக நுட்பமான சிகிச்சை அளிக்க முடிகிறது.


நாட்டில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்துறையில் ஏற்பட்ட புரட்சியைப் போன்று மருத்துவத் துறையிலும் புரட்சி ஏற்பட்டு, மாற்றம் காணத் துவங்கியுள்ளது.


நானோ தொழில்நுட்பம் மருத்துவத்துறையில் புதுமை படைத்துள்ளது. இத் தொழில்நுட்பம் மூலம் உடலில் உள்ள வைரஸ்களை அழிக்கும் ஆரம்ப பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எதிர்கால மருத்துவத்தில் நானே தொழில் நுட்ப ரோபோக்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். இவ்வாறு விஞ்ஞானி சிவதாணு பிள்ளை பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us