UPDATED : ஆக 22, 2020 12:00 AM
ADDED : ஆக 22, 2020 07:10 AM
சென்னை;
ரஷ்ய நாட்டில், ஆற்றில் மூழ்கி இறந்த நான்கு மாணவர்களின் உடல்கள், நேற்று பகல் சென்னை வந்தடைந்தன;
கடலுார் மாவட்டம், திட்டக்குடியைச் சேர்ந்தவர் விக்னேஷ் ராமு; திருப்பூரைச் சேர்ந்தவர் முகமது ஆசிக்; சேலத்தைச் சேர்ந்தவர் மனோஜ் ஆனந்த்; சென்னையைச் சேர்ந்தவர் ஸ்டீபன். நான்கு பேரும் மருத்துவ மாணவர்கள். ரஷ்ய நாட்டின், வோல்கோகிராட் மாகாணத்தில் உள்ள, மருத்துவ பல்கலையில், மருத்துவம் படித்து வந்தனர்.
நான்கு பேரும், 8ம் தேதி, அங்குள்ள வோல்கா ஆற்றில் மூழ்கி இறந்தனர்.மத்திய அரசு, ரஷ்ய அரசுடன் பேச்சு நடத்தியதன் பயனாக, நான்கு மாணவர்களின் உடல்களும், நேற்று பகல், 3:30 மணிக்கு, சென்னை விமான நிலையம் வந்தடைந்தன.தமிழக அரசு அதிகாரிகள் முன்னிலையில், நான்கு மாணவர்களின் உடல்களும், அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
