தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கைத்தொழில் மறுசீரமைப்பு: விண்ணப்பிக்க அழைப்பு

கைத்தொழில் மறுசீரமைப்பு: விண்ணப்பிக்க அழைப்பு

கைத்தொழில் மறுசீரமைப்பு: விண்ணப்பிக்க அழைப்பு


UPDATED : ஆக 23, 2020 12:00 AM

ADDED : ஆக 23, 2020 10:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 23, 2020 12:00 AM ADDED : ஆக 23, 2020 10:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை;
பாரம்பரிய கைத் தொழில்கள் மறுசீரமைப்பிற்கான திட்டத்தில், பயன் பெற விரும்புவோர் விண்ணப்பிக்க, கதர் கிராம தொழில்கள் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து, அந்த ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ், கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் இயங்கி வருகிறது. இந்த ஆணையம், கிராமப்புற ஏழை, எளிய கைவினைஞர்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதில், பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதனீர், பனை கருப்பட்டி, பனை ஓலையில் இருந்து தயாரிக்கப்படும் அழகு சாதனப் பொருட்கள் மற்றும், &'பிரஷ்&' வகைகளை தயாரிக்கவும், சந்தைப்படுத்தவும், நிதி உதவியுடன் கூடிய புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பாரம்பரிய தொழில்களை புனரமைக்கவும், அதன் வாயிலாக கைவினைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி நிரந்தர வருவாய் ஈட்டவும், எஸ்.எப்.யு.ஆர்.டி.ஐ., என்ற, பாரம்பரிய கைத்தொழில்கள் மறுசீரமைப்பிற்கான நிதித் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.
எனவே, பனை சம்பந்தப்பட்ட தொழில்களில் அனுபவம் வாய்ந்த மற்றும் விருப்பம் உள்ள, அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மேலும் விபரங்களை, kviconline.gov.in/sfruti என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us