தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கட்டணம் இன்றி கல்லுாரி படிப்பு

கட்டணம் இன்றி கல்லுாரி படிப்பு

கட்டணம் இன்றி கல்லுாரி படிப்பு


UPDATED : ஆக 25, 2020 12:00 AM

ADDED : ஆக 25, 2020 01:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 25, 2020 12:00 AM ADDED : ஆக 25, 2020 01:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தனியார் கல்லுாரி ஒன்று, கல்வி கட்டணமின்றி பட்டப்படிப்பில் சேர, மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே ஏனாதியில், &'ஏனாதி ராஜப்பா கலை, அறிவியல் கல்லுாரி&' இயங்கி வருகிறது. டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள், பயின்று வருகின்றனர்.
இக்கல்லுாரியில், இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு, 2020 -- 2021ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. கொரோனா தாக்கத்தால், டெல்டா மாவட்டங்களில், ஏராளமான குடும்பங்களில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதனால், மாணவர்களின் மேற்படிப்பு பாதித்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில், 2020- - 2021ல், ஓராண்டு கல்வி கட்டணம் இன்றி, மாணவர்கள் பட்டப் படிப்புகளில் சேரலாம் என, நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. இணையதளம் வழியாக மாணவர் சேர்க்கை நடக்கிறது. 
&'மேலும், தகவலுக்கு, 0437 - 3-223730 என்ற தொலைபேசி எண்ணிலும், www.enathirajappacollege.com என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்&' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us