தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி தொலைக்காட்சி இ.பி.எஸ்., வாழ்த்து

கல்வி தொலைக்காட்சி இ.பி.எஸ்., வாழ்த்து

கல்வி தொலைக்காட்சி இ.பி.எஸ்., வாழ்த்து


UPDATED : ஆக 27, 2020 12:00 AM

ADDED : ஆக 27, 2020 09:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 27, 2020 12:00 AM ADDED : ஆக 27, 2020 09:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை;
ஓராண்டு நிறைவு செய்த, கல்வி தொலைக்காட்சிக்கு, முதல்வர் இ.பி.எஸ்., வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:

கடந்த ஆண்டு, ஆக., 26ம் தேதி, கல்வி தொலைக்காட்சி வழியாக, &'கற்றல் கற்பித்தல்&' திட்டத்தை துவக்கி வைத்தேன். அனைத்து வகுப்புகளுக்கும், பாடம் சார்ந்த பகுதிகள், குறைவான கால அளவில், வீடியோ பதிவுகளாக எடுக்கப்பட்டு, அரசு கேபிள், &'டிவி&' வழியாக, ஒளிபரப்பப்பட்டு வந்தது. தற்போது, கொரோனா காரணமாக, புதிய கல்வி ஆண்டை துவக்குவது, மிகப்பெரும் சவாலாக உள்ளது.
எனவே, மாணவர்கள் தடையின்றி, தங்கள் வீடுகளிலிருந்தே, கற்றலை தொடரும் வகையில், கல்வி தொலைக்காட்சி மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. புதிய வடிவில் தயாரிக்கப்பட்ட பாடங்களை, கல்வி தொலைக்காட்சி வழியாக, ஒளிபரப்பு செய்யும் நிகழ்ச்சி, ஜூலை, 14ம் தேதி துவக்கப்பட்டது. தமிழக அரசின் முயற்சிகளுக்கு உறுதுணையாக, 11 தனியார் மற்றும் கேபிள், &'டிவி&'களிலும், ஏர்டெல் டி.டி.எச்., வழியாகவும், கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன
.ஒன்று மற்றும், பிளஸ் 1 வகுப்புகளுக்கான, கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு, பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முடிந்ததும் ஆரம்பமாகும். கல்வி தொலைக்காட்சி, முதலாம் ஆண்டை பூர்த்தி செய்கிறது.அதற்கு என் வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். மாணவ - மாணவியர் நலன் கருதி, என் தலைமையிலான அரசு, இதுபோன்ற எண்ணற்ற சாதனைகளைப் புரியும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us