தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரியர்ஸ் விவகாரம் ஸ்டாலின் யோசனை

அரியர்ஸ் விவகாரம் ஸ்டாலின் யோசனை

அரியர்ஸ் விவகாரம் ஸ்டாலின் யோசனை


UPDATED : செப் 09, 2020 12:00 AM

ADDED : செப் 09, 2020 07:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 09, 2020 12:00 AM ADDED : செப் 09, 2020 07:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
அரியர்ஸ் மாணவர்கள் விவகாரத்தில் தகுதி அடிப்படையில் தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:

அரியர்ஸ் தேர்வு எழுதாமல் தேர்ச்சி அளிக்க பல்கலை மானிய குழு மற்றும் அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சிலின் விதிமுறைகள் இடம் தராது என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பாவும் &'அகில இந்திய தொழில்நுட்பகவுன்சில் இதை ஏற்கவில்லை&' என தெரிவித்துள்ளார்.
சூரப்பாவுக்கு அகிலஇந்திய தொழில் நுட்ப கவுன்சில் எழுதிய கடிதத்தில் &'தேர்வு நடத்தி மதிப்பெண்கள் அளிக்காமல் தேர்ச்சி என்பது ஏற்க முடியாது&' என கூறப்பட்டுள்ளது. எனவே கபட நாடகம் ஆடி மாணவர்களின் எதிர்காலத்துடன் தொடர்ந்து விளையாட வேண்டாம். கல்லுாரி மாணவர்கள் நியாயமான தகுதியான அடிப்படையில் தேர்ச்சி பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us