தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொதுத்தேர்வு எழுதும் மாணவர் அதிகரிப்பு

பொதுத்தேர்வு எழுதும் மாணவர் அதிகரிப்பு

பொதுத்தேர்வு எழுதும் மாணவர் அதிகரிப்பு


UPDATED : அக் 28, 2009 12:00 AM

ADDED : அக் 28, 2009 04:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2009 12:00 AM ADDED : அக் 28, 2009 04:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் குறித்த முழுமையான விவரங்களை, வரும் 31ம் தேதிக்குள் தேர்வுத்துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் இந்தப் பணிகள் முடிந்துள்ள நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை குறித்த விவரம் நவம்பர் முதல் வாரத்தில் தெரியும்.


ஒவ்வொரு கல்வியாண்டிலும், அரையாண்டுத் தேர்வுக்குப் பின் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் குறித்து பட்டியல் தயாரிக்கப்படும். அதன்படி, வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு எழுத உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி, கடந்த ஒரு மாதமாக நடந்து வந்தன. கல்வி மாவட்ட வாரியாக மாணவ, மாணவிகள் குறித்த முழுமையான விவரங்கள் அடங்கிய, சிடிக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. வருவாய் மாவட்ட வாரியான விவரங்களை மற்றொரு, சிடியில் பதிவு செய்து, தேர்வுத்துறைக்கு அனுப்பி வருகின்றனர்.


இந்த விவரங்களை, வரும் 31ம் தேதிக்குள் தேர்வுத்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, பல்வேறு மாவட்டங்களில் இருந்து, மாணவர்கள் பெயர் பட்டியல் அடங்கிய, சிடிக்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களில் இருந்தும், சிடிக்கள் வந்ததும், அரசு தகவல் தொகுப்பு விவர மையத் திற்கு (டேட்டா சென்டர்) அனுப்பி பதிவு செய்யப்படும். மீண்டும் ஒரு முறை, அனைத்துப் பள்ளிகளுக்கும் பெயர் பட்டியலை அனுப்பி, சரிபார்த்து இறுதி செய்யப்படும்.


தேர்வெழுதும் மொத்த மாணவ, மாணவிகள் எண்ணிக்கை குறித்த விவரம், நவம்பர் முதல் வாரத்தில் தெரியும். கடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, எட்டு லட்சத்து 42 ஆயிரத்து 350 மாணவர்கள் எழுதினர். இந்த எண்ணிக்கை வரும் ஆண்டில், ஒன்பது லட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், பிளஸ் 2 தேர்வை ஆறு லட்சத்து 47 ஆயிரத்து 632 பேர் எழுதினர். வரும் ஆண்டில், ஏழு லட்சம் பேர் எழுதலாம் என கூறப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us