தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொடர் பயிற்சியும், ஊக்குவித்தலும் இருந்தால்...

தொடர் பயிற்சியும், ஊக்குவித்தலும் இருந்தால்...

தொடர் பயிற்சியும், ஊக்குவித்தலும் இருந்தால்...


UPDATED : அக் 05, 2020 12:00 AM

ADDED : அக் 05, 2020 03:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2020 12:00 AM ADDED : அக் 05, 2020 03:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
டிஸ்லெக்சியா குறைபாடு மாணவர்களின் வாழ்க்கையே இவ்வளவு தானா என்று பெற்றோர்கள் பயப்பட வேண்டாம் என உளவியல் நிபுணர் புவனா வாசுதேவன் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் கடந்த 1998 ம் ஆண்டு முதல் டிஸ்லெக்சியா அசோசியேஷன் நிறுவனத்தை நடத்தி வரும், உளவியல் நிபுணர் புவனா வாசுதேவன் கூறியதாவது:

இந்தியாவில் 20 சதவீத மாணவர்களுக்கு கற்றலில் குறைபாடு இருக்கிறது. இந்த குழந்தைகளை, பெற்றோர்களும், ஆசிரியர்களும் நன்றாக படிக்கும் மாணவர்களுடன் ஒப்பிட்டு பேசி, மனதளவில் நிரந்தரமான குறையை ஏற்படுத்தி விடுகின்றனர். டிஸ்லெக்சியா என்பது, எழுத்துக்களை அடையாளம் கண்டு, கோர்வையாக வாசிப்பது, கண்ணால் பார்த்து, காதால் கேட்ட வார்த்தைகளை எழுத்து வடிவமாக எழுதுவது, வினாக்களை புரிந்து கொண்டு எழுதுவதில் குழப்பம் ஏற்படும்.
படித்தல், எழுதுதல் மற்றும் எழுத்துக்களைக் கூட்டுதல் ஆகியவை நினைவு படுத்தி பார்ப்பதில் சிரமம் அடைவர். கண்ணுக்கு புலப்படாத வலது மற்றும் இடப்பக்க மூளைகளை இணைக்கும் நரம்புகளின் செயல்பாட்டு குறைகளால் டிஸ்லெக்ஸியா பாதிப்பு ஏற்படுகிறது.பெண்களின் கர்ப்ப காலங்களில் ஏற்படும் மனஅழுத்தம் , குழந்தை பிறக்கும் சமயத்தில் மற்றும் குழந்தை பிறந்தவுடன் அழாமல் இருப்பது, வலிப்பு, முதல் 5 ஆண்டுகளில் சளி அதிகமாக இருப்பது போன்ற காரணங்களால் குழந்தைகளுக்கு ஒலிப்பு விழிப்புணர்வு குறைவாக இருக்கிறது.
படிப்பில் பெரும் உதவியாக இருப்பது, இடது பக்க மூளை. இதன் செயல்பாடு குறைவாக இருக்கும்போது, வலதுபக்க மூளையின் ஆளுமைத்திறன் கூடுதலாக இருக்கும். படம் வரைதல், ஆடல், பாடல், புராஜெக்ட் செய்தல் மற்றும் கற்பனைத் திறன் கொண்ட செயல்களில் அதிக ஈடுபாடு உடையவர்களாக இருப்பர். இந்த குறையை நரம்பியல் மற்றும் உளவியல் சோதனை மூலமாக நுண்ணறிவுத்திறன், வாசித்தல், எழுதுதல், படித்தல், நினைவுத்திறன், கணக்குபோடும் திறன், கற்கும் திறன் என ஒவ்வொரு பகுதியையும் உளவியல் ரீதியாக ஆராய்ந்து மூளையின் திறமையை கண்டுபிடிக்க முடியும்.
இக்குறைபாட்டை 6 வயதிலேயே கண்டுபிடித்தால் நிவர்த்தி செய்வது சுலபம். 12 வயதுக்குள் சரி செய்தால் மட்டுமே பலனை கொடுக்கும்.இப்படிப்பட்ட மாணவர்களுக்கு வாழ்க்கையே இவ்வளவு தானா என்று பெற்றோர்கள் பயப்பட வேண்டாம். மாபெரும் மேதைகள் டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டு பெரும் சாதனைகள் புரிந்தவர்கள். தொடர் பயிற்சியும், ஊக்குவித்தலும் இருந்தால், டிஸ்லெக்சியா குறைபாட்டை நீக்க முடியும்.
புதுச்சேரியில் இயங்கி வரும் டிஸ்லெக்சியா அசோசியேஷனில், ஆயிரக்கணக்கான மாணவர்களை சிறப்பு பயிற்சி மூலம் பள்ளி, கல்லுாரி வரை படித்து, பல முதன்மையான நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். தொடர்புக்கு pdabhuvana@yahoo.co.in இமெயில் மூலமும், 9894507259 மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us