தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சான்றிதழ் பதிவேற்றம் டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

சான்றிதழ் பதிவேற்றம் டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

சான்றிதழ் பதிவேற்றம் டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு


UPDATED : அக் 23, 2020 12:00 AM

ADDED : அக் 23, 2020 03:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2020 12:00 AM ADDED : அக் 23, 2020 03:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
மருந்தக ஆய்வாளர் பணி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், 28ம் தேதி முதல், சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
இது குறித்து, அரசு பணியாளர் தேர்வாணைய, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

உதவி இயக்குனர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அதிகாரி மற்றும் தமிழக மருந்தக ஆய்வகத்தில், மருந்தக ஆய்வாளர் பணிக்கான தேர்வு நடத்தப்பட்டது. அதில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்கள், தங்களின் அசல் சான்றிதழ்களை, 28ம் தேதி முதல், நவ., 6க்குள், &'ஆன்லைனில்&' பதிவேற்ற வேண்டும். தமிழக அரசின் கேபிள் நிறுவனம் நடத்தும், இ - சேவை மையங்களின் வழியாக, சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டும். உரிய காலத்தில் அனுப்ப தவறுவோர், தேர்வு நடவடிக்கைகளில் இருந்து நீக்கப்படுவர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us