தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்கள் வெள்ளத்தால் திக்குமுக்காடியது திருவள்ளூர்

மாணவர்கள் வெள்ளத்தால் திக்குமுக்காடியது திருவள்ளூர்

மாணவர்கள் வெள்ளத்தால் திக்குமுக்காடியது திருவள்ளூர்


UPDATED : நவ 03, 2009 12:00 AM

ADDED : நவ 03, 2009 11:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2009 12:00 AM ADDED : நவ 03, 2009 11:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தினமலர் நாளிதழ் ஏழாவது ஆண்டாக திருவள்ளூரில் ஜெயித்துக் காட்டுவோம்&' நிகழ்ச்சியை  நடத்தியது. காலையில் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கும், பிற்பகல் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கும் நிகழ்ச்சி நடந்தது.காலை 8 மணிக்கு ஆரம்பித்த நிகழ்ச்சிக்கு, அதிகாலை 3 மணியில் இருந்து மாணவ, மாணவியர் குவியத் துவங்கினர்.


அருகில் உள்ள மணவாளநகரில் இருந்து வெகு தூரத்தில் உள்ள பெரியபாளையம், வெங்கல், மணவூர், பேரம்பாக்கம், கடம்பத்தூர், திருவாலங்காடு, திருமழிசை பகுதிகளிலிருந்து, பஸ்களிலும், ரயில்களிலும் மாணவ, மாணவியர் திரண்டு வந்தனர்.பிற்பகல் பிளஸ் 2 மாணவ, மாணவியர் ஆயிரக்கணக்கில் குவிந்தனர். நிகழ்ச்சி முடிந்து வெளியேறிய மாணவ, மாணவியர் கூட்டத்தால் திருவள்ளூர் நகரமே திக்குமுக்காடியது. அந்தளவிற்கு மாணவ, மாணவியர் ஆர்வமாக கலந்து கொண்டு ஜெயித்துக் காட்டுவோம் என்ற உறுதியுடன் திரும்பிச் சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us