தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு ஊழியருக்கு மேலாண்மை பயிற்சி

அரசு ஊழியருக்கு மேலாண்மை பயிற்சி

அரசு ஊழியருக்கு மேலாண்மை பயிற்சி


UPDATED : நவ 04, 2020 12:00 AM

ADDED : நவ 04, 2020 09:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2020 12:00 AM ADDED : நவ 04, 2020 09:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
அரசு ஊழியர் பதவி உயர்வு பெறுவதில் நிலவிய சிக்கலை தீர்க்கும் வகையில் &'ஆன்லைன்&' மூலமாக மேலாண்மை பயிற்சி அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் பணியில் இணைந்தவுடன் அடிப்படை பயிற்சி அளிக்கப்படுகிறது. பதவி உயர்வு பெறுவதற்கான தகுதி பெறும் முன் மேலாண்மை பயிற்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் மார்ச் 17 முதல் அரசு ஊழியர் பயிற்சி நிலையமான பவானிசாகர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. மேலாண்மை பயிற்சி நடக்காததால் அரசு ஊழியர் பதவி உயர்வு பெறுவதிலும் சிக்கல் நீடித்தது. ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. 
வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில் &'ஆன்லைன் பயிற்சி ஏற்பாடு நடந்து வருகிறது. மேற்பார்வை அலுவலர் நியமனம் பயிற்சி அளிக்கும் உயர் அதிகாரிகள் நியமன பணி நடந்து வருகிறது&' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us