UPDATED : நவ 26, 2020 12:00 AM
ADDED : நவ 26, 2020 10:36 PM
சென்னை:
சென்னையில் நாளை துவங்க இருந்த, இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின்கீழ், சென்னை, அரும்பாக்கம், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லுாரியும், ஒன்பது தனியார் கல்லுாரிகளும் உள்ளன. இவற்றில், 660க்கும் மேற்பட்ட இடங்கள், அரசு ஒதுக்கீட்டுக்கு வருகின்றன. இதற்கான மாணவர் சேர்க்கை, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடக்கிறது.
இந்த படிப்பில் சேர்வதற்கான தர வரிசை பட்டியலில், 2,002 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். இதற்கான கவுன்சிலிங், சென்னை, அரும்பாக்கம் சித்தா மருத்துவமனை வளாகத்தில், நாளை நடைபெறும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, புயல் காரணமாக, கவுன்சிலிங் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மறுதேதி, விரைவில் அறிவிக்கப்படும்.
