தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு ஐ.டி.ஐ.,யில் நேரடி சேர்க்கை

அரசு ஐ.டி.ஐ.,யில் நேரடி சேர்க்கை

அரசு ஐ.டி.ஐ.,யில் நேரடி சேர்க்கை


UPDATED : டிச 07, 2020 12:00 AM

ADDED : டிச 07, 2020 07:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 07, 2020 12:00 AM ADDED : டிச 07, 2020 07:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர், அரசு ஐ.டி.ஐ.,யில் நடக்கும் நேரடி மாணவர் சேர்க்கையில், தகுதியான மாணவ, மாணவியர் பங்கேற்கலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை: 

ஓசூர், அரசு ஐ.டி.ஐ., மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், ஆக., 2020 - 21ம் ஆண்டுக்கான தொழில் பிரிவு சேர்க்கைக்கு, இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், காலியிடங்களை நிரப்ப, டிச., 7 முதல் வரும், 12 வரை, ஓசூர் அரசு ஐ.டி.ஐ.,யில் நேரடி சேர்க்கை நடக்கிறது. 14 வயது முதல், 40 வயதுக்கு உட்பட்ட ஆண்களும், 14 வயதிற்கு மேற்பட்ட பெண்களும் விண்ணப்பிக்கலாம். எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், கம்பியாள் (இரு ஆண்டு), வெல்டர் (ஒரு ஆண்டு) பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம். 
அதேபோல், 10ம் வகுப்பு தேர்த்தி பெற்றவர்கள், கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர் (கோபா மகளிர் ஒரு ஆண்டு), கணினி வன்பொருள் மற்றும் வலைதள பராமரிப்பு (ஒரு ஆண்டு) மற்றும் கம்மியர் மின்னணுவியல் (2 ஆண்டு), பொருத்துனர் (இரு ஆண்டு), அச்சுவார்ப்பவர் தொழில்நுட்பவியலாளர் (ஒரு ஆண்டு), கம்மியர் கருவிகள், கம்மியர் இயந்திரம் மற்றும் மின்னணுவியல், தொழில்நுட்பவியலாளர், இயந்திர வேலையாள் (இரு ஆண்டு), கருவி மற்றும் அச்சு செய்பவர் மற்றும் கடைசலர் (இரு ஆண்டு) ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு, இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 
மேலும் விபரங்களுக்கு, துணை இயக்குனர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஓசூர், என்ற முகவரியிலோ, 04344- 262457 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us