UPDATED : டிச 09, 2020 12:00 AM
ADDED : டிச 09, 2020 12:42 AM
சென்னை:
ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுதும், அலோபதி டாக்டர்கள், தர்ணா மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
&'ஆயுர்வேத டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம். சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி, யுனானி போன்ற ஆயுஷ் மருத்துவ முறைகள், அலோபதி மருத்துவம் ஆகியவை ஒன்றிணைக்கப்படும்&' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.இதற்கு, நாடு முழுதும், அலோபதி டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கடும் பாதிப்பு
இந்த அறிவிப்பை ரத்து செய்ய வலியுறுத்தி, இந்திய மருத்துவ சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போன்ற போராட்டங்கள் நேற்று நடந்தன. தமிழகத்தில், சென்னை, மதுரை, கோவை, அரியலுார் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில், டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை டி.எம்.எஸ்., வளாகத்தில், இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக பிரிவு டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை வளாகத்தில், ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது குறித்து, ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில தலைவர், பாலகிருஷ்ணன் கூறியதாவது:மத்திய அரசு கொண்டு வரும் கலவை மருத்துவத்தால், மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.
முறையான பயிற்சி இல்லாமல், ஆயுர்வேத டாக்டர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டால், நோயாளிகள் கடும் பாதிப்பை சந்திப்பர்.கோரிக்கைஎனவே, இதுதொடர்பான அரசாணையை, மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இதை செயல்படுத்த, &'நிடி ஆயோக்&' அமைத்துள்ள குழுக்களையும் கலைக்க வேண்டும்.கோரிக்கையை ஏற்க மறுத்தால், போராட்டம் தீவிரமடையும். வரும், 11ம் தேதி பணி புறக்கணிப்பு போராட்டத்திற்கு, இந்திய மருத்துவ சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. அரசு டாக்டர்களுடன் ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
