தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கால்நடை மருத்துவ படிப்பு கவுன்சிலிங்

கால்நடை மருத்துவ படிப்பு கவுன்சிலிங்

கால்நடை மருத்துவ படிப்பு கவுன்சிலிங்


UPDATED : டிச 22, 2020 12:00 AM

ADDED : டிச 22, 2020 12:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 22, 2020 12:00 AM ADDED : டிச 22, 2020 12:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கட்டுப்பாட்டில், நான்கு அரசு கால்நடை மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. அவற்றில், கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு; உணவு, பால்வளம் மற்றும் கோழியின தொழில்நுட்ப படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளில், 2020 - 21ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலில், 13 ஆயிரத்து, 901 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் என, சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை, சென்னை வேப்பேரியில் உள்ள, கால்நடை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் நாளை நடைபெறுகிறது.
பொதுப்பிரிவு மற்றும் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கான கவுன்சிலிங், www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in என்ற, பல்கலையின் இணையதளங்களில், ஆன்லைன் வாயிலாக நடைபெற உள்ளது. தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவர்கள், 24ம் தேதி காலை, 10:00 முதல், 28ம் தேதி மாலை, 6:00 மணி வரை பல்கலையின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். 
தகுதியான மாணவர்களுக்கு கல்லுாரிகளில் சேருவதற்கான ஆணை, 30ம் தேதி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இந்த ஆணையை பதிவிறக்கம் செய்து, ஜனவரி, 13 மாலை, 5:00 மணிக்குள் கல்லுாரிகளில் சேர வேண்டும். இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கிற்கான பதிவு, ஜன., 19ல் துவங்கும். கவுன்சிலிங் தொடர்பான விபரங்களுக்கு, பல்கலையின் இணையதளத்தை பார்க்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us