தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதுச்சேரி பேராசிரியருக்கு புதுமைப்பித்தன் விருது

புதுச்சேரி பேராசிரியருக்கு புதுமைப்பித்தன் விருது

புதுச்சேரி பேராசிரியருக்கு புதுமைப்பித்தன் விருது


UPDATED : ஜன 30, 2021 12:00 AM

ADDED : ஜன 30, 2021 09:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 30, 2021 12:00 AM ADDED : ஜன 30, 2021 09:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி எழுத்தாளர் பஞ்சாங்கத்திற்கு புதுமை பித்தன் விருதும், ரூ. ஒரு லட்சம் பரிசும் வழங்கப்பட்டது.
அமெரிக்காவின் விளக்கு இலக்கிய அமைப்பின் சார்பில் மதுரையில் புதுமைப்பித்தன் விருது வழங்கும் விழா நடந்தது. விழாவில் திருநெல்வேலி கவிஞர் கலாப்பிரியா, புதுச்சேரி பேராசிரியர் பஞ்சாங்கத்திற்கு தலா ரூ. ஒரு லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது. ஐகோர்ட் நீதிபதி மகாதேவன் விருது வழங்கி பாராட்டினார்.
தமிழில் பண்டைய இலக்கிய இலக்கணங்களில் இருந்து இன்றைய சமகாலம் வரையில்ஆழ்ந்த புலமையும், அவற்றை சமூகவியல் மற்றும் நவீன கலையிலக்கியக் கோட்பாடுகளின் அடிப்படையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆழமான கட்டுரைகளில் திறனாய்வு செய்து, தமிழில் தெளிவான திறனாய்வுப் பார்வையை உருவாக்கி இருப்பதற்காக பேராசிரியர் பஞ்சாங்கத்திற்கு இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us