தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு கல்லுாரியில் நுகர்வோர் பயிலரங்கம்

அரசு கல்லுாரியில் நுகர்வோர் பயிலரங்கம்

அரசு கல்லுாரியில் நுகர்வோர் பயிலரங்கம்


UPDATED : மார் 01, 2021 12:00 AM

ADDED : மார் 01, 2021 08:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 01, 2021 12:00 AM ADDED : மார் 01, 2021 08:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம் அரசு கல்லுாரியில், நுகர்வோர் மன்றம் சார்பில் மாணவர்களுக்கான நுகர்வோர் விழிப்புணர்வு பயிலரங்கம் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) சுப்ரமணி தலைமை தாங்கி, பயிலரங்கத்தை துவக்கி வைத்தார். தமிழ் துறை தலைவர் மகாவிஷ்ணு வரவேற்றார். எம்.ஜி.ஆர்., அரசு கல்லுாரி முதல்வர் கணேசன், நுகர்வோருக்கான உரிமைகள், சட்டங்கள், நேர்மையற்ற வணிக நடைமுறைகள், நுகர்வோர் ஏமாற்றப்படும் முறைகள், விளம்பரங்களின் தாக்கம், நுகர்வோர் பயன்பாடு குறித்து கூறினார்.நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் நுார் அகமது, நுகர்வோர் உரிமைகள், சட்டங்கள், குறைதீர் மன்றங்கள், நேர்மையற்ற வணிக நடைமுறைகள் குறித்து கருத்துரையாற்றினார்.
தொடர்ந்து பேச்சு, கட்டுரை, கவிதை மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும், பயிலரங்கில் பங்கேற்று பயிற்சி பெற்ற நுாறு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. ஆய்வாளர் மீனாட்சி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us