தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகள் முழு நேரம் இயங்கும்

பள்ளிகள் முழு நேரம் இயங்கும்

பள்ளிகள் முழு நேரம் இயங்கும்


UPDATED : மார் 02, 2021 12:00 AM

ADDED : மார் 02, 2021 09:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 02, 2021 12:00 AM ADDED : மார் 02, 2021 09:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நாளை 3 ம் தேதி முதல் முழு நாள் திறந்திருக்க வேண்டும் என பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் கடந்த ஜனவரி 4ம் தேதி முதல் பள்ளிகள் திறந்து 1 முதல் பிளஸ் 2 வரை வகுப்புகள் வாரத்தின் 6 நாட்களுக்கு காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடந்தது.பின்னர் ஜனவரி 18ம் தேதியில் இருந்து அரசு, தனியார் பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வரை முழு நேரம் திறக்கும் என அறிவித்தனர். ஆனால் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை அரை நாள் மட்டும் திறந்திருக்க அனுமதித்து வகுப்புகள் நடக்கின்றன.
விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிகளுக்கு சென்று சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்று வருகின்றனர். இந்நிலையில் நாளை 3ம் தேதி முதல் புதுச்சேரியில் பள்ளிகள் முழு நேரம் திறந்திருக்க வேண்டும் என பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளி கல்வித் துறை இயக்குனர் ருத்ரகவுடு பிறப்பித்த உத்தரவு:

புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் நாளை 3ம் தேதி முதல் முழு நேரமும் வழக்கமான கால அட்டவணையை பின்பற்றி வாரத்தில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை6 நாட்கள் இனி செயல்படும்.
புதுச்சேரியில் காலையில் நான்கு பாட வேளைகளும், மாலையில் 3 பாடவேளை என ஏழு பாட வேளைக்கான வகுப்புகள் தினசரி நடக்க உள்ளது. பள்ளிகள் முழு நேரம் திறப்பதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் பணியை பள்ளி கல்வித் துறை முடுக்கி விட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us