UPDATED : ஏப் 03, 2021 12:00 AM
ADDED : ஏப் 03, 2021 02:12 PM
அ நிறம் | அளவு
உயர்தரத்தில், உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி வழங்கும் நோக்கில் கடந்த 1909ம் ஆண்டு பெங்களூருவில் ஏற்படுத்தப்பட்ட இக்கல்வி நிறுவனம், பல்கலைக்கழக மானியக் குழு சட்டம் 1956ன் கீழ் செயல்படுகிறது.
அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் தொழில் நிறுவனங்கள் மற்றும் சமூக தேவைக்கு ஏற்ப பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டும் வருகிறது.
பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கல்வி நிறுவனம், எய்ம்ஸ், ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., கல்வி நிறுவனங்களை போன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் துவங்கும் நோக்கம் இல்லை என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
