UPDATED : ஏப் 10, 2021 12:00 AM
ADDED : ஏப் 10, 2021 04:11 PM
அ நிறம் | அளவு
நாடு முழுதும் உள்ள 54 மத்திய பல்கலைகளில் இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கும் ஒரே நுழைவு தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய பல்கலைகளில் முதுநிலை பட்டப் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு ஏற்கனவே &'கியூசெட்&' என்ற மத்திய பொது நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்வு இனி இளநிலை பட்டப்படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கும் நடத்தப்பட உள்ளது. இது குறித்து பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., சார்பில் நிபுணர் குழு ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது.
அதன் மீது முடிவு எடுக்கப்பட்டு தேர்வுக்கான அறிவிப்பு, விரைவில் வெளியிடப்பட உள்ளது.
