தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கட்டுரைப் போட்டி; மாணவிகள் அசத்தல்

கட்டுரைப் போட்டி; மாணவிகள் அசத்தல்

கட்டுரைப் போட்டி; மாணவிகள் அசத்தல்


UPDATED : மே 05, 2021 12:00 AM

ADDED : மே 05, 2021 03:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 05, 2021 12:00 AM ADDED : மே 05, 2021 03:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னுார்:
குறுவளமைய அளவிலான போட்டியில், செல்லப்பம்பாளையம் பள்ளி மூன்று இடங்களையும் வென்றது.
ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில், அன்னுார் குறுவளமைய அளவில், இளைஞர் மற்றும் சூழல்சார் மன்றம் சார்பில், நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி நடந்தது. இதில் செல்லப்பம்பாளையம் நடுநிலைப்பள்ளி மாணவிகள் அகல்யா, சொளபாஷினி, லய தர்ஷினி ஆகியோர் முறையே, முதல் மூன்று இடங்களை வென்றனர்.
ஒன்பது முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில், அன்னுார் அரசு மேல்நிலைப் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவர்கள் குருபரன், சஞ்சீவி ராஜ் ஆகியோர், முதல், இரண்டு இடங்களையும், பசூர் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி மாணவி தீபா மூன்றாம் இடமும் பெற்றனர்.
முதல் பரிசாக, ஏழு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள டேப்லட், இரண்டாம் பரிசாக நான்கு ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட்போன், மூன்றாம் பரிசாக ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருள் வழங்கப்பட்டது. அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சுப்பிரமணியன், உதவி தலைமையாசிரியர் ஜோஷ்வா ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us