தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவ, மாணவியருக்கு சைக்கிள் வழங்கப்படுமா?

மாணவ, மாணவியருக்கு சைக்கிள் வழங்கப்படுமா?

மாணவ, மாணவியருக்கு சைக்கிள் வழங்கப்படுமா?


UPDATED : மே 11, 2021 12:00 AM

ADDED : மே 11, 2021 07:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 11, 2021 12:00 AM ADDED : மே 11, 2021 07:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அவிநாசி:
பல பள்ளிகளில், வினியோகிக்கப்படாமல் உள்ள இலவச சைக்கிள் மாணவர்களுக்கு, மீண்டும் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மாநில அரசின் சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. கடந்த,ஜன., பிப்., மாதம் பல பள்ளிகளில், இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. 
பல மாவட்டங்களில், அந்தந்த பகுதியில் உள்ள அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் மூலம், விழா நடத்தி, தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன், சைக்கிள் வினியோகத்தை முடிக்க திட்டமிடப்பட்டு சைக்கிள்கள் வழங்கப்பட்டன. இருப்பினும், பல இடங்களில் சைக்கிள் வழங்கப்படவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இலவச சைக்கிள் மாணவர்களுக்கு மீண்டும் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us