UPDATED : மே 25, 2021 12:00 AM
ADDED : மே 25, 2021 07:19 PM
கோவிட் 19 பெருந்தொற்று காராணமாக, பெற்றோர் அல்லது குடும்ப உறுப்பினரை இழந்த மாணவர்களுக்கு, ராஜஸ்தானின் கோட்டாவில், மருத்துவம் மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மற்றும் தங்குமிடம் வழங்கப்படும் என்று மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா தெரிவித்தார். தேசிய அளவில் போட்டித் தேர்வுக்கு பயிற்சி அளிப்பதில் முக்கிய பயிற்சி மையங்கள் கோட்டா நகரத்தில் செயல்பட்டு வரும் நிலையில், பயிற்சி மைய இயக்குநர்களுடன் சந்திப்பை நடத்தி, இந்த சவாலான காலங்களில் தேவைப்படும் மாணவர்களுக்கு உதவ முன்வருமாறு சபாநாயகர் கேட்டுக் கொண்டதன் பேரில், கொரனாவால் குடும்பத்தை இழந்து தவிக்கும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி, தங்குமிடம் மற்றும் உணவு வழங்க நிறுவனங்கள் ஒப்புக் கொண்டுள்ளன.
மேலும், சில பயிற்சி மைய நிறுவனங்கள், பண உதவிகளையும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்குவதாக ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இதன்படி, நாடு முழுவதிலும் எந்த மாநிலங்களை சேர்ந்த பாதிக்கப்பட்ட மாணவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சபாநாயகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
