தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நுழைவு தேர்வுகளை நீக்க வலியுறுத்தல்

நுழைவு தேர்வுகளை நீக்க வலியுறுத்தல்

நுழைவு தேர்வுகளை நீக்க வலியுறுத்தல்


UPDATED : ஜூன் 06, 2021 12:00 AM

ADDED : ஜூன் 06, 2021 08:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 06, 2021 12:00 AM ADDED : ஜூன் 06, 2021 08:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அவரது அறிக்கை:

நாடு முழுதும் மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்ட, பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மருத்துவம், தொழில்நுட்ப படிப்புகளுக்கான நுழைவு தேர்வுகளை நடத்த, மத்திய அரசு நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. கொரோனா அச்சத்தில் உள்ள மாணவர்கள், ஆகஸ்டில் நடைபெறும், &'நீட்&' தேர்வுக்கு தயாராவது சாத்தியமில்லை.
எனவே, தேசிய அளவில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு உள்ளிட்ட அனைத்து நுழைவு தேர்வுகளையும், நடப்பாண்டில் ரத்து செய்ய வேண்டும். மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட தேர்வு வாரியங்கள் வழங்கியுள்ள, மதிப்பெண்களின் அடிப்படையில், அனைத்து படிப்புகளுக்கும், மாணவர் சேர்க்கை நடத்த, மத்திய - மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

விசாரணை தேவை

&'டுவிட்டர்&' பக்கத்தில் ராமதாஸ் கூறியிருப்பதாவது:


வண்டலுார் உயிரியல் பூங்காவில், சிங்கங்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், ஒரு சிங்கம் உயிரிழந்து விட்டதாகவும் வெளியாகி உள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. சிங்கங்களிடம் இருந்து, பிற விலங்குகளுக்கும் தொற்று பரவாமல் தடுக்க வேண்டும்.
வண்டலுார் உயிரியல் பூங்கா, பல வாரங்களாக மூடப்பட்டு இருக்கிறது; பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. பயிற்சியாளர்களும், உணவு வழங்கும் பராமரிப்பு குழுவினர் மட்டுமே விலங்குகளை நெருங்க முடியும் என்ற நிலையில், அவற்றுக்கு தொற்று எவ்வாறு ஏற்பட்டது?
விலங்குகளை பராமரிக்கும் குழுவினருக்கு கொரோனா ஆய்வு செய்யப்பட்டதா; தடுப்பூசிகள் போடப்பட்டதா; அவர்கள் வாயிலாக சிங்கங்களுக்கு கொரோனா பரவியிருக்கலாமா என்பது குறித்த விசாரணை தேவை. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us